தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி 1975ம் ஆண்டு வெளிவந்தது. ஏ.ஜெகன்நாதன் இயக்கிய இந்தப் படத்தை சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார், என்.பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.ஜி.ஆருடன் ராதா சலுஜா, பண்டரி பாய், ஆர்.எஸ்.மனோகர், ஜசரி வேலன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
"நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற... இன்பமே உந்தன் பேர் பெண்மையோ..., ஒன்றும் அறியாத பெண்ணோ..., இதழே இதழே தேன் வேண்டும், தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்..." போன்ற தேனினும் இனிய பாடல்களை கொண்ட படம்.
இந்தப் படம் இப்போது நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு வெளிவர இருக்கிறது. டிஜிட்டல், சினிமாஸ்கோப், டிடிஎஸ் சவுண்ட், கியூப் தொழில்நுட்பத்தில் மீண்டும் உருவாகி உள்ளது. இதனை குவாலிட்டி சினிமா சார்பில் பி.மணி, மற்றும் டி.கே.கிருஷ்ணகுமார் வெளியிடுகிறார்கள்.