ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியாவின் பிரபல மாடல் அழகி டயான எரப்பா. மிஸ்.பெமினா, மிஸ்.இண்டியா போட்டிகளில் கவனம் ஈர்த்த டயானா, கடந்த ஆண்டு கிங் பிஷர் காலண்டரில் பிகினி உடையில் கொடுத்த போஸ் மூலம் புகழ்பெற்றார். கர்நாடக மாநிலம் கூர்க்கை சேர்ந்த டயானா, தற்போது முன்னணி மாடல் அழகியாக உள்ளார். அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.
தற்போது இவர், மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தின் மூலம் சினிமா நட்சத்திரமாகியிருக்கிறார். இதில், அவர் சிம்பு ஜோடியாக நடித்துள்ளார். கிளாமருக்கு புகழ்பெற்ற டயானா படத்திலும் மாடல் அழகியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
கன்னட சினிமா வாய்ப்புகளை மறுத்த டயானா, மணிரத்னம் படம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் தற்போது கிளாமர் நடிகைகள் இல்லாத குறையை டயானா தீர்ப்பாரா ? என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரியும்.