பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
எதிர்ப்புகளை மீறி காலா படம் கர்நாடகாவில் சில பகுதிகளில் வெளியானது. போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் இன்று வெளியாகி உள்ளது. காவிரி விவகாரத்தில் ரஜினி சொன்ன கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் உள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையும் படத்தை திரையிட மாட்டோம் என கூறியது.
தனுஷ் வழக்கு தொடர்ந்ததால் காலா படத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. அதேசமயம், காலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது என முதல்வர் குமாரசாமியும் கூறியிருந்தார்.
இத்தனை எதிர்ப்புகளை தாண்டியும் கர்நாடகாவில் காலா படத்தை 130 தியேட்டர்களில் சி நிறுவனம் வெளியிடுகிறது. ஆனால் கன்னட அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் காலா படம் காலையில் வெளியாகவில்லை.
ராய்ப்பூர் மற்றும் பெல்லாரி பகுதிகளில் மட்டும் காலா படம் 11 மணிக்கு மேல் வெளியானது. மங்களூரு பகுதிகளில் வெளியாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பெங்களூருவில் தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வன்முறை ஏதும் நிகழாத வண்ணம் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. மதியத்திற்கு பிறகு ஓரளவுக்கு சரியாகும் என தெரிகிறது.