'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
ரங்கஸ்தலம் படத்தின் வெற்றிக்குப்பிறகு ராம்சரண் நடித்து வரும் புதிய படத்தை போயாபதி ஸ்ரீனு இயக்கி வருகிறார். 40 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்து விட்ட இந்த படத்திற்காக சல்மான்கானின் டிரைனரை அழைத்து வந்து சிக்ஸ்பேக் கெட்டப்புக்கு மாறிக் கொண்டிருக்கிறார் ராம்சரண்.
இந்த படத்தில் ராம்சரணுடன் கியாரா அத்வானி, விவேக் ஓபராய், பிரஷாந்த், சினேகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிரஷாந்த் -சினேகா இணைந்து நடித்த முதல் படம் விரும்புகிறேன். சுசிகணேசன் இயக்கத்தில் 2002ல் வெளியான அந்த படத்திற்கு பிறகு பொன்னர் சங்கர், ஆயுதம் படங்களில் பிரஷாந்துடன் நடித்த சினேகா, இப்போது நான்காவது முறையாக இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.