நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
எதிர்ப்புகளை தாண்டி கர்நாடகாவில் காலா படம் 130 தியேட்டர்களில் ரிலீஸாகிறது.
காவிரி விவகாரத்தில் ரஜினி கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் அவரின் காலா படத்தை திரையிட கர்நாடகா வர்த்தக சபை தடை விதித்து இருக்கிறது. மேலும் அங்குள்ள சில அமைப்புகளும் படத்தை திரையிட விடமாட்டோம் என எதிர்த்து வருகின்றனர்.
காலா படம் வெளியாகும் போது தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடகா ஐகோர்ட் உத்தரவிட்டது.
அதேசமயம், கர்நாடகா முதல்வர் இப்படத்திற்கு தடை என்று நேரடியாக கூறவில்லை என்றாலும் தற்போதைய சூழலில் காலா வெளியாகமல் இருப்பதே நல்லதே என கூறியிருக்கிறார்.
இதனால் காலா வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. இருந்தபோதும், காலா படத்தை கர்நாடகாவில், சி நிறுவனம் 130 தியேட்டர்களில் வெளியிடுவதாக இந்நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார்.
இதனிடையே காலா படத்தை வெளியிடும் விநியோகஸ்தர் அலுவலகத்தில் புகுந்த எதிர்ப்பாளர்கள் அங்கிருந்த காலா பட பேனர் மற்றும் போஸ்டர்களை கிழித்தும், அலுவலகத்தை அடித்து சேதப்படுத்தியும் உள்ளனர். படத்தை வெளியிட மாட்டோம் என எதிர்ப்பாளர்கள் முழங்கி வருகின்றனர்.