பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்திய அரசின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து விரைவில் பிலிம்பேர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பட்டியலில் பல தமிழ்ப்படங்களும், நடிகர் - நடிகைகள், இயக்குநர்களும் இடம்பிடித்துள்ளனர். அந்த பட்டியல் விவரம் வருமாறு...
சிறந்த படங்களுக்கான விருது பட்டியலில், "அருவி, தரமணி, அறம், விக்ரம் வேதா, தீரன் அதிகாரம் ஒன்று" இடம் பெற்றுள்ளன.
சிறந்த இயக்குனருக்கான விருது பட்டியலில், அருண் பிரபு புருஷோத்தமன்(அருவி), கோபி நயினார்(அறம்), அட்லி(மெர்சல்), தனுஷ்(பா.பாண்டி), எச்.வினோத்(தீரன்), புஷ்கர் காயத்ரி(விக்ரம் வேதா) இடம் பெற்றுள்ளனர்.
சிறந்த நடிகருக்கான விருது பட்டியலில், விஜய்(மெர்சல்), கார்த்தி(தீரன் அதிகாரம் ஒன்று), மாதவன்(விக்ரம் வேதா), விஜய் சேதுபதி(விக்ரம் வேதா), ராஜ்கிரண்(பா.பாண்டி) இடம் பெற்றுள்ளனர்.
சிறந்த நடிகைக்கா விருது பட்டியலில், அதிதிபாலன்(அறம்), ஜோதிகா(மகளிர் மட்டும்), நயன்தாரா(அறம்), ஆண்ட்ரியா(தரமணி), அமலாபால்(திருட்டு பயலே 2), ரேவதி(பா.பாண்டி) இடம் பெற்றுள்ளனர்.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பட்டியலில், ஏ.ஆர்.ரகுமான்(மெர்சல், காற்று வெளியிடை), அனிருத்(வேலைக்காரன், விவேகம்), டி.இமான்(போகன்) இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களில் யார் யாருக்கு பிலிம்பேர் விருது கிடைக்கப்போகிறது என்பது விரைவில் தெரிந்து விடும்.