Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிக பணம்; அதிக புகழ்; நிம்மதியை கெடுக்கும்! சொல்கிறார் தம்பி ராமையா!!

05 ஏப், 2012 - 10:56 IST
எழுத்தின் அளவு:

புதுக்‌கோட்டையில் பிறந்து, 17வயதில் டி.ஆர். ரசிகராக இருந்து, அவரின் திறமை கண்டு வியந்து, சினிமா ஆசையில் சென்னைக்கு ஓடி வந்தவர் தம்பி ராமையா. ஒரு இசையமைப்பாளராக, பாடல் ஆசிரியராக தன்னை முன் நிறுத்த விரும்பியவர், சிலமாறுபட்ட சூழ்நிலையால் இயக்குநரானார். தொடர்ந்து சில சரிவுகளை சமாளித்து பின்னர் நடிகரானார். மைனா படம் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. இப்போது நெடுஞ்சாலை படத்தில் சத்யா இசையில், அவரே பாடல் எழுதி, பாடி, நடித்தும் இருக்கிறார். கிருஷ்ணா தியேட்டர், மன்னாரு போன்ற படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார். இருந்தும் இயக்குநர் ஆசை அவரை விடவே இல்லை. இப்போது ஒரு கூடை முத்தம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

என்னதான் படங்களில் நடித்து சம்பாதித்தாலும் இன்னும் சொந்த வீடு வாங்க முடியவில்லையே என்ற கவலை தம்பி ராமையாவுக்கு இருக்கிறது. சமீபத்தில் தான் லோன் போட்டு கார் வாங்கினாராம். ஏன்? என்று கேட்டால் தேவைக்கு அதிகமான பணமும், புகழும் ஒருவனது நிம்மதியை கெடுத்துவிடும். எனக்கு எது தேவையோ அது இருக்கிறது, அதுபோதும் என்கிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த "கழுகு" படம் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதுதவிர கும்கி, சாட்டை, பேச்சியக்கா மருமகன், மதில் மேல் பூனை, தாண்டவம் என்று ஒரு பெரிய லிஸ்ட்டை கையில் வைத்திருக்கிறார் தம்பி ராமையா.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

நடராஜன் - Dammam,சவுதி அரேபியா
31 மே, 2012 - 14:38 Report Abuse
 நடராஜன் ராமையா அவர்கள் பெயரில்தான் தம்பியாக உள்ளார்,அவரது உன்னதமான கருத்துகளில் இருந்து பார்க்கும்போது அவர் அண்ணனாக தெரிகிறார்.இருப்பதை கொண்டு சந்தோஷப்படுபவனே வாழ்க்கையை நன்றாக வாழமுடியும்.
Rate this:
abdul - chennai,இந்தியா
07 ஏப், 2012 - 00:52 Report Abuse
 abdul neengal சொல்வது 100% உண்மை ஆனால் அது சரியாய் varaathu sir
Rate this:
கணபதி ராஜாமணி - Chennai,இந்தியா
06 ஏப், 2012 - 16:59 Report Abuse
 கணபதி ராஜாமணி நான் உங்கள் ரசிகன். உங்கள் கருத்து சரியானதே. ""ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசையை நீக்கினால் துன்பமின்றி வாழலாம்."". வாத்துக்களுடன் இரா கணபதி சுப்ரமணியன்.
Rate this:
ramasubbu - tuticorin,இந்தியா
05 ஏப், 2012 - 14:01 Report Abuse
 ramasubbu தம்பி ராமையா அவர்கள் ரஜினியுடனும், கமலுடனும் நடித்தால் இன்னும் உயரம் தொட்டுவிடுவார். அவரது இயக்கத்தில் மாறுபட்ட படங்கள் வரட்டும்.
Rate this:
vschandru610 - namakkal  ( Posted via: Dinamalar Android App )
05 ஏப், 2012 - 12:38 Report Abuse
vschandru610 sir சொந்த வீடு வாங்கமுடியவில்லைனு வருத்தபடாதி்ங்க என்னதான் அரண்மணையே இருந்தாலும் கடைசியில் இடுகாட்டில் தான் நிரந்தரம் place. "இருக்கும் இடத்தி்ல் சந்தோசமாக வாழ கற்று கொள்" னு யாரும் சொல்லவில்லை நான்தான் சொல்றேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in