அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
காவிரி பிரச்சினை தொடர்பாக மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது காலா பட வெளியீடு குறித்து தான் பேச வில்லை என்றும், காவிரியை விட காலா முக்கியமில்லை என்றும் தெரிவித்தார். அவரின் இந்த கருத்துக்கு பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
கர்நாடக முதல்வரிடம் காலா படம் குறித்து கமல்ஹாசன் பேசாதது தவறு. விஸ்வரூபம் படத்துக்கு பிரச்னை ஏற்பட்டபோது அதை கமல்ஹாசன் பெரிதுபடுத்தினார். உலகமே அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பதுபோல அவரது பேச்சுக்கள் இருந்தன. ஆனால் காலா படத்துக்கு இப்போது அவர் குரல் கொடுக்காமல் இருக்கிறார்.
நான் காலா படத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன். எல்லா படங்களுக்காகவும் பேசுவது எனது கடமை. கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜனதா, ம.ஜ.த என்று எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும். சமூக விரோதிகளின் செயலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. படத்தை வெளியிடக்கூடாது என்று தடுப்பது தவறு. பிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் இருக்க வேண்டியதுதானே...” இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.