மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன் சில வருடங்களுக்கு முன்புவரை முன்னணி நடிகையாக விளங்கினார். றெக்க, மிருதன் படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்தே காணாமல் போய்விட்டார்.
தற்போது அவர் நடித்துவரும் ஓரே படம் 'யங் மங் சங்'. எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா, நடிப்பில் உருவாகிவரும் படம் இது. 'மெர்க்குரி', 'சார்லி சாப்ளின் 2' படங்களை தொடர்ந்து, 'யங் மங் சங்' படத்திலும் நடித்து வந்தார் பிரபுதேவா.
கும்பகோணம் பகுதியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் 'லஷ்மி', 'சார்லி சாப்ளின் 2', 'ஊமை விழிகள்' என பிரபுதேவா அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். எனவே பல மாதங்களாக முடங்கிக்கிடந்தது 'யங் மங் சங்' படம். பிறகு தற்போது மீண்டும் 'யங் மங் சங்' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
தற்போது மீண்டும் வளரத்தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சத்தியமங்கலத்தில் நடந்து வருகிறது. யங் சங் மங் படம் வெற்றியடைந்தால் லட்சுமி மேனன் இன்னொரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது. இல்லை என்றால் கஷ்டம்தான்.