ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். ஓவியா, சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், ஹார்த்தி, அனுயா, காஜல், கணேஷ் வெங்கட்ராம், கஞ்சா கருப்பு, பரணி, ஷக்தி வாசு, சுஜா வருணி, ஜூலி, நமிதா, ஸ்ரீ, ரைஸா வில்சன், ஆரவ், என 19 பேர் போட்டியாளர்கள் எவ்வித வெளியுலகத் தொடர்பு இல்லாமல், 100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றியடைந்தது.
இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூடுதல் அட்டென்ஷனும் கிடைத்தது. கடந்த சில மாதங்களாகவே பிக் பாஸ் 2 விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜூன் 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் ஞாயிறு வரை அதாவது இரவு 9 மணி முதல் 10 மணி வரை பிக் பாஸ் 2 ஒளிபரப்பாக இருக்கிறது.
கடந்த சீசனைப்போலவே இரண்டாவது சீஸனிலும் போட்டி துவங்குவதற்கு முன்பு பத்திரிகையாளர்களை ஒரு நாள் தங்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.
சீசன் 2வில் நடிகை சிம்ரன் பங்கேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.