ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தனுஷின் தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படம் ஜுன் 7ம் தேதி வெளியாகிறது. இப்படம் சுமார் 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரானதாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த்தின் சம்பளம் மட்டுமே 45 கோடி என்கிறார்கள். இப்படத்தை வெளியிடும் உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சுமார் 100 கோடி கொடுத்து வாங்கியதாகவும் தகவல்.
வெளியீட்டிற்கு முன்பே இப்படம் சுமார் 230 கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இப்படத்தின் சாட்டிலைட் உரிமை மட்டுமே 70 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தியேட்டர் உரிமை 60 கோடி, வெளிநாட்டு உரிமை 45 கோடி, கேரளா உரிமை 10 கோடி, ஆந்திரா உரிமை 30 கோடி, மற்ற இந்திய மாநில உரிமை 10 கோடி என தியேட்டர் வெளியீட்டு உரிமை மட்டும் மொத்தமாக 155 கோடி என்கிறார்கள்.
இசை உரிமை 5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். ஆக மொத்தமாக 230 கோடி ரூபாய் வருகிறது. இன்னும் டிஜிட்டல் உரிமை, மற்ற உரிமைகள் என பல உரிமைகள் உள்ளன. கர்நாடகாவில் வெளியாகும் பட்சத்தில் அதன் விலையையும் சேர்க்கலாம். அவற்றையெல்லாம் சேர்த்தால் மொத்தமாக 300 கோடி ரூபாய் வரை 'காலா' வியாபாரம் நடக்கலாம்.
தனுஷிற்கு 'டேபிள் பிராபிட்' ஆக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வந்திருக்கும் என்பது கூடுதல் தகவல் என்கிறார்கள்.