ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கவுதம் மேனன் இயக்கத்தில் அதர்வாவும், ஐஸ்வர்யா ராஜேசும் நடித்துள்ளனர். இது படம் அல்ல... பாடல். இயக்குனர் கவுதம் மேனன் சமீபகாலமாக தனி பாடல்களை இயக்கி அதனை இணையதளத்தில் பதிவேற்றி வருகிறார். இதற்காக ஒன்றாக ஒரிஜினல் என்ற நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார்.
ஏற்கெனவே கூவை என்ற பாடலை இயக்கி வெளியிட்டார். இதில் சின்னப்பொண்ணு பாடி நடித்தார். அடுத்து உலவிரவு என்ற பாடலை வெளியிட்டார் இதில் டொவினோ தாமசும், டி.டியும் நடித்தார்கள். இப்போது மூன்றாவதாக போதை கோதை என்ற பாடலை வெளியிட இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் கவுதம் மேனன். இந்த பாடலில் அதர்வாவும், ஐஸ்வர்யா ராஜேசும் நடித்துள்ளனர். இதற்கு பாடகர் கார்த்திக் இசை அமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார்.