Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாமி 2 டிரைலர் : 10 பாலகிருஷ்ணா படம் பார்த்த எபெக்ட்

04 ஜூன், 2018 - 12:20 IST
எழுத்தின் அளவு:
How-i-Saamy-2-Trailer?

ஹரி இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் நாயகனாக நடிக்கும் 'சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் நேற்று யு டியுபில் வெளியிடப்பட்டது. முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷ்ன் படமாக மட்டுமே இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் வெளியான நிமிடத்திலிருந்தே பல சர்ச்சையை உருவாக்கிவிட்டது. பார்ப்பதற்கு 'சிங்கம்' படங்களின் காட்சிகள் போன்று இருப்பதாகப் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால், டிரைலரைப் பார்த்தால் பாலகிருஷ்ணா நடித்த படங்களை ஒரே டிரைலரில் பார்த்த எபெக்ட் தான் கிடைக்கிறது. வழக்கம் போல சுமோக்களும், கார்களும் பறக்கின்றன. நாயகன் அடித்தால் 50 அடி தள்ளி விழுகிறார்கள். டிரைலர் முழுவதுமே 10 பச்சை மிளகாயை ஒன்றாக்க் கடித்த்து போல விக்ரம் ஆவேசத்துடனேயே இருக்கிறார். வழக்கம் போல சிரித்துக் கொண்டே இருந்தாலும் கீர்த்தி சுரேஷ், விக்ரம் ஜோடியாக பொருத்தமாக இருப்பாரா என்றும் யோசிக்க வைக்கிறது.

'நான் தாய் வயித்துல பொறக்கலடா, பேய் வயித்துல பொறந்தேன், நான் சாமி இல்ல பூதம்' என்ற வசனங்கள் சீரியசாக பேசப்படுவதை விட கிண்டலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவற்றை வைத்து நேற்றே பல மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றன.

பலத்த விமர்சனங்கள் எழுந்தாலும் 24 மணி நேரத்திற்குள் 30 லட்சம் பார்வைகளைக் கடந்து 'சாமி ஸ்கொயர்' டிரைலர் யு டியூபில் டிரென்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது.

Advertisement
அருவா சண்டைக்காக பாடினார் ரம்யா நம்பீசன்அருவா சண்டைக்காக பாடினார் ரம்யா ... என் விருது நயன்தாரா - விக்னேஷ் சிவன் என் விருது நயன்தாரா - விக்னேஷ் சிவன்


வாசகர் கருத்து (3)

Balu - Wellington,நியூ சிலாந்து
04 ஜூன், 2018 - 15:15 Report Abuse
Balu நமக்கு தமிழ் ராக்கர்ஸ் இருக்காங்க
Rate this:
04 ஜூன், 2018 - 14:39 Report Abuse
jayaramakrishnan one of the main reasons why Sami movie was hit because it had Vivek comedy and cute scenes and Harris Jayaraj music. not sure Samy square has the same success factors.
Rate this:
ppmkoilraj - erode.10,இந்தியா
04 ஜூன், 2018 - 12:38 Report Abuse
ppmkoilraj ஹரியின் படங்கள் நம்பிக்கையுடன் பார்க்கலாம்.கொடுக்கும் பணத்துக்கு மோசம் இருக்காது.போலீஸ்கதைகள் யூனிஃபாரம் காக்கிதானேபோட்டாகணும்.என எல்லா போலீஸ் சினிமாவிலும் காக்கி யூனிபார்ம். போடுராங்க? அப்படிண்ணு கேட்பது போல இருக்கு.விக்ரம் நடிப்பு ஒருபக்கம் ஹரியின் இயக்கம் நிச்சயம் அமோகமாக ஹிட்டாகபோகுது இந்த சாமி2.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in