ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தற்போது காயங்குளம் கொச்சுன்னி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. 36 வயதினிலே' புகழ் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் இந்தப்படத்தில் எண்பதுகளில் வாழ்ந்த கொள்ளையனாக டைட்டில் ரோலில் நடிக்கிறார் நிவின்பாலி. அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் சுமார் 40 நிமிடங்கள் வரும் வகையில் இதிக்கரா பக்கி என்கிற கொள்ளையானாக முக்கியமான வேடத்தில் மோகன்லாலும் நடித்துள்ளார்.. கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.
இந்தப்படத்திற்காக சுமார் 161 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி நேற்றுடன் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளார்கள்.. மலையாள திரையுலக வரலாற்றிலேயே அதிகநாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் இதுதான். கோவா, மங்களூர், பாலக்காடு, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.