சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா |
பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கார்த்தி. 'வனமகன்' அறிமுகநாயகி சயீஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், 'மேயாத மான்' பிரியா பவானிசங்கரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதாவது கார்த்தியை ஒருதலையாக காதலிக்கும், அவரது மாமா பெண்ணாக நடித்துள்ளார்.
கடைக்குட்டி சிங்கம் படத்தில் விவசாயியாக கார்த்தி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் கடைக்குட்டி சிங்கம் படம் வெளிவர உள்ள நிலையில், புதுமுக இயக்குநர் ரஜத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் கார்த்தி.
இந்தப்படத்தைத் தொடர்ந்து இரும்புத்திரை படத்தின் இயக்குநரான பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி.
பி.எஸ்.மித்ரனை கார்த்தியிடம் அறிமுகப்படுத்தி வைத்து அவரிடம் கதை கேட்கும்படி சிபாரிசு செய்தது யார் தெரியுமா? விஷால். அனேகமாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள படத்தில் கௌரவ வேடத்தில் விஷால் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்.