தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி- 2, வடசென்னை என தனுஷ் நடித்த படங்கள் எல்லாம் முழுமையடையாமல் பாதியோடு நிற்கின்றன. இந்நிலையில், 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூன்றாம் பாகம் உருவாக இருக்கிறது என்றும் அதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
விஐபி படத்தின் முதல் பாகத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கினார். இரண்டாம் பாகத்தையும் வேல்ராஜ் இயக்க இருந்த நேரத்தில் கடைசி சேரத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குநரானார்.
'வேலையில்லா பட்டதாரி' படத்தின் முதல் பாகம் அடைந்த வெற்றியை அதன் இரண்டாம் பாகம் பெறவில்லை. இந்நிலையில், விஐபி படத்தின் மூன்றாம் பாகத்தை யார் இயக்கப் போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஐபி மூன்றாம் பாகத்தை தனுஷ் இயக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. 'வேலையில்லா பட்டதாரி' மூன்றாம் பாகத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில் 'அடுத்த வருடம் தனுஷுடன் இணையப் போகிறேன்' என்று கூறியுள்ளார் அனிருத்.