பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் 'தேவ்' என்ற படத்தில் நடிக்கிறார் கார்த்தி. சூர்யாவின் மகன் தேவ் பெயரில் கார்த்தி நடிக்கும் இந்த படத்தை தயாரித்த 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' எஸ்.லக்ஷமன் தயாரிக்கிறார்.
சூர்யா நடித்த 'சிங்கம்-2', த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் 'மோகினி' ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் இது. அதிரடி ஆக்ஷன், அட்வெஞ்சர், காமெடி படமாக மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருக்கிறது. சண்டை காட்சிகளை இமயமலைப்பகுதிகளிலும், மும்பையிலும், ஐரோப்பாவிலும் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
தேவ் படத்தில் ஸ்டைலிஷான லுக்கில் நடிக்கிறார் கார்த்தி. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
தேவ் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். கார்த்தியுடன் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணையும் முதல் படம் இது. அது மட்டுமல்ல, ஹாரிஸ் ஜெயராஜ் கைவசம் இருக்கும் ஒரே தமிழ்ப்படம் தேவ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.