பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாலிவுட் நடிகர், சல்மான் கானை அடித்து, உதைப்போருக்கு, 2 லட்சம் ரூபாய் பரிசு அளிப்பதாக, வி.எச்.பி., முன்னாள் தலைவர், பிரவீன் தொகாடியாவின் புதிய அமைப்பைச் சேர்ந்த, கோவிந்த் பராஷர் அறிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர், சல்மான் கான் தயாரிப்பில் உருவாகியுள்ள, லவ்ராத்ரி திரைப்படம், அக்டோபரில், நவராத்திரி பண்டிகை நாளில் திரைக்கு வருகிறது. இது குறித்து, வி.எச்.பி., முன்னாள் தலைவர், பிரவீன் தொகாடியாவின் புதிய அமைப்பான, ஹிந்து ஹி ஆகேவின், ஆக்ரா நகர தலைவர், கோவிந்த் பராஷர் கூறியதாவது:
ஹிந்துக்களால் கொண்டாடப்படும், நவராத்திரி பண்டிகையை இழிவு செய்யும் வகையில், லவ்ராத்ரி என, தன் தயாரிப்பில் உருவான படத்திற்கு, சல்மான் கான் பெயரிட்டு உள்ளார். லவ்ராத்ரி படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இப்படம் திரையிடப்பட்டால், போராட்டங்களில் ஈடுபடுவோம்.
லவ்ராத்ரி படத்தை திரையிடும், தியேட்டர்களை தீயிட்டு கொளுத்துவோம். ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட சல்மான் கானை அடித்து, உதைப்பவருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.