'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். குறிப்பாக, விஷால் நடித்து வரும் சண்டக்கோழி-2 படத்தில் அதிரடி வில்லியாக நடிக்கிறார். அவரது வில்லி நடிப்பு குறித்து ஒரு பேட்டியில் பெருமையாக கூறியிருந்தார் விஷால்.
இந்த நிலையில், நேற்று முதல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 62-வது படத்தில் நடித்து வருகிறார் வரலட்சுமி. அரசியல் கலந்த கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் வரலட்சுமிக்கு ஒரு நெகட்டிவ் வேடம் என்று கூறப்பட்டபோதும் தற்போதைக்கு அதை சஸ்பென்சாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், விஜய் 62வது படத்தின் படப்பிடிப்பில் ஜூன் 1-ந்தேதி முதல் தான் கலந்து கொண்டு வருவதை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள வரலட்சுமி, தளபதி விஜய்யுடன் இன்று முதல் எனது பயணம் தொடங்குகிறது. இப்படத்தில் எனக்கு ஆச்சர்யப்படும் வகையில் ஒரு லுக்கை கொடுத்துள்ளார் முருகதாஸ். ஆனால் அந்த லுக்கை இப்போதைக்கு வெளியிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார் வரலட்சுமி.