பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
முதன் முதலாக ஸ்ருதிஹாசன் ஸ்டைலான கேங்ஸ்டர் கேரக்டரில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் ஹிந்தியில் மகேஷ்பாபு மஞ்ச்ரேக்கர் படத்தில் நடித்து வருகிறார்.
இன்னும் பெயரிப்படாத இந்தப் படம் கேங்ஸ்டர் கதை. இதில் வித்யூத் ஜமால் ஹீரோவாக நடிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. விரைவில் தொடங்க உள்ள இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
பொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும். இதனால் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஸ்ருதிஹாசன் லண்டனில் சர்வதேச இசை கோர்ப்பு சம்மந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும். இந்த படப்பிடித்தின் படபிடிப்பை முடித்தக் கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.