மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அமுதன் இயக்கத்தில் 2010 ம் ஆண்டு வெளிவந்த படம் தமிழ் படம். இதன் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ் படம் 2 என்ற பெயரில் தயாராகி வரும் இடத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முழு நீள காமெடி படமாக தயாராகி வரும் இப்படத்தின் டீசர் 40 விநாடிகள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த டீசரில், துப்பாக்கி, மெர்சல், துப்பறிவாளன், மங்காத்தா, விவேகம், விக்ரம் வேதா, சிங்கம் போன்ற படங்களை கிண்டல் செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் இறுதிக்கட்டபணிகள் முடிவடையாத காரணத்தினால், வெளியாவது தள்ளிபோயுள்ளது.
சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள தமிழ் படம் 2 ஜூலை மாதம் ரிலீசாகலாம் என கூறப்படுகிறது.