மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருப்பவர் இந்தி நடிகை ஹூமா குரோசி. இந்த படத்தில் 40 வயது பெண்ணாக ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார் அவர். இதையடுத்து தமிழில் தொடர்ந்து நடிப்பதற்கு சில நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் உள்ளார்.
இந்த நிலையில், தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமாகிறார் ஹூமா குரோசி. தெலுங்கில் பாப்பி இயக்கத்தில் வெங்கடேஷ்-நாகசைதன்யா இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ள ஹூமா குரோசி ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
மேலும், இதேபடத்தில் இன்னொரு நாயகியாக ரகுல்பிரீத்சிங்கும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.