ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்றாலே அந்தப் படத்தின் வியாபாரத்தை பட பூஜை அன்றே செய்து முடித்துவிடுவார்கள். ஆனால், 'லிங்கா' படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினிகாந்த் பட வியாபாரம் பழையபடி விறுவிறுப்பாக நடைபெறுவதில்லை.
'கபாலி' படத்தையும் பல சிக்கலுக்குப் பிறகே வியாபாரம் செய்தார்கள். ஏற்கெனவே ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்திற்காக பலர் எப்போதோ அட்வான்ஸ் கொடுத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். படம் எப்போது வரும் என்றும் அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. அதற்குள் 'காலா' படத்தைத் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
'காலா' படத்தின் வியாபாரமும் எப்போதே நடக்காமல் கடந்த ஒரு வாரமாகத்தான் நடந்து வருகிறது. ரஜினி படம் என்றாலே அவுட்ரேட் ஆக விற்பது வழக்கம். ஆனால், 'காலா' படத்தை அப்படி யாரும் வாங்க முன் வரவில்லை எனத் தெரிகிறது. எம்ஜி அடிப்படையிலும் வாங்க யாரும் விருப்பம் தெரிவிக்காததால் டிஸ்ட்ரிபியூஷன் முறையில் மட்டுமே வியாபாரம் நடந்து வருகிறது. இன்றுதான் தென்னாற்காடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய வினியோக ஏரியாக்களின் உரிமையை விற்றிருக்கிறார்கள்.
'காலா' படத்தின் கடைசி நேர வியாபாரமும் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் வசூலை திரையுலகினர் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தயாரிப்பாளராக தனுஷ் போட்ட முதலீட்டையும் மீறி லாபத்தை சம்பாதித்துவிட்டார். இருப்பினும் வசூல் நிலவரம் தான் ஒரு நடிகரின் சம்பளத்தையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும். அது ரஜினிகாந்திற்கும் பொருத்தமானது தான்.
'காலா' காலை வாருமா?, காலரைத் தூக்கி விடுமா ?, என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.