Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனரீதியாக துன்புறுத்த வழக்கு : நீதிமன்றத்தில் ரஜினி மனு

30 மே, 2018 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Rajini-file-case-to-cancel-case-against-him

ரஜினியின் சம்பந்தியும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் போத்ரா 65 லட்சம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரஜினியையும் அவர் சேர்த்திருந்தார். தன்னிடம் பணம் பறிப்பதற்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாக ரஜினி அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு முகுந்த் சந்த் போத்ரா, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ரஜினி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜூன் 6ந் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி கோர்ட் ரஜினிக்கு சம்மன் அனுப்பியது. இந்த நிலையில் தன் மீது தொரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ரஜினி ஜார்ஜ் டவுன் நீதிமன்றதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாது:

பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என் மீது சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. என்னிடம் பணம் பறிப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்று இந்த வழக்கை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்திருக்கிறேன். இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் மீண்டும் அதே காரணத்துக்காக வழக்கு தொடர்வது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. என்னை மன ரீதியாக துன்புறுத்தும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் ரஜினி கூறியுள்ளார்.

Advertisement
தூத்துக்குடியில் ரஜினி ஆறுதல் : ரூ.2 லட்சம் நிதி உதவிதூத்துக்குடியில் ரஜினி ஆறுதல் : ரூ.2 ... ஜீவா ஜோடியாக பிரபல மாடல் அழகி நடாஷா சிங் ஜீவா ஜோடியாக பிரபல மாடல் அழகி நடாஷா ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in