ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சத்யஜோதி தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் 'விஸ்வாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில நாட்கள் நடைபெற்றது. அடுத்து எடுக்க வேண்டிய காட்சிகளுக்கான செட் வொர்க் முடிவடையவில்லை என்பதால், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை மும்பையில் நடத்துகின்றனர்.
இதற்காக 'விஸ்வாசம்' படக்குழுவினர் மும்பை கிளம்புகின்றனர். விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்போது இன்னொரு நடிகையும் 'விஸ்வாசம்' படத்தில் இணைந்துள்ளார்.
'ராஜா ராணி', 'திருட்டு விசிடி', முதலான படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால் தான் அவர்.
ரஜினியின் 'காலா' படத்தில் அவரது மகளாக முக்கியமான ஒரு கேரக்டரில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ளார்.
'காலா' படத்தில் ரஜினியுடன் நடித்த சாக்ஷி அகர்வால் இப்போது 'விஸ்வாசம்' படத்தின் மூலம் அஜித்துடனும் இணைந்து நடிக்கிறார்.