தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியத் திரையுலகில் அரசியல் தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வருவது குறைவுதான். தெலுங்கில் வெளிவந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி' படம் வெளிவருவதற்கு முன்பே இரண்டு 'பயோபிக்' படங்கள் அறிவிக்கப்பட்டன. இரண்டு படங்களுமே அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்.
ஒருவர் என்டிஆர், மற்றொருவர் ஒய்எஸ்ஆர். என்டிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படம் அவர் சினிமா நடிகர் ஆக ஆனது, பின்னர் அரசியல்வாதி ஆனது என அனைத்து விஷயங்களையும் அடங்கிய படமாக உருவாக உள்ளதாம். இப்படத்திற்கு 'என்டிஆர்' என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஒய்எஸ்ஆர் என அழைக்கப்படும் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி ஆந்திரா முதல்வராக இருந்து ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர். அவருடைய அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்பத்தைக் கொடுத்தது அவருடைய யாத்திரைப் பயணம். அதனால், இந்தப் படத்திற்கு 'யாத்ரா' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு படங்களுமே விரைவில் ஆரம்பமாக உள்ளன. இரண்டு படங்களையும் அடுத்த வருட சங்கராந்தி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். 'மகாநதி' படம் போன்று இந்த இரண்டு படங்களுக்கும் வரவேற்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.