விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ந்தேதி வெளியாகும் நிலையில், அப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. அதையடுத்து லட்சக்கணக்கானோர் பார்த்து லைக் செய்து வருவதோடு, ரஜினி ரசிகர்கள் அதை டிரன்டிங் செய்து வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான நேரத்தில், ஒரு உருக்கமான டுவீட் வெளியிட்டுள்ளார் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
அதாவது, 28-5-2018 என்ற இதே தேதியில், அன்று உடல்நலமில்லாமல் இருந்த என் அப்பாவை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அந்த நாளை இப்போதுவரை என்னால் மறக்கவே முடியவில்லை. அங்கு சென்று சிகிச்சை பெற்ற சில நாட்களில் அனைவரது பிரார்த்தனையினால் அவர் குணமடைந்து விட்டார்.
அந்த வகையில், 7 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் அவர் நடித்த காலா படத்தின் டிரைலர் இப்போது வெளியாகியிருப்பதால் எனக்கு அந்த பழைய நினைவுகள் மனதில் தோன்றியது என்று தெரிவித்துள்ளார்.