ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தொடரி படத்தை தொடர்ந்து 'ஹாத்தி மேரா சாத்தி' என்ற படத்தை இயக்குகிறார் பிரபு சாலமன். ராணா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.
பிரபு சாலமன் இயக்கும் 'கும்கி-2'வில் நடிக்க விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியானது. அது உண்மையில்லை.
இதுகுறித்து விஷ்ணு விஷால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... பிரபுசாலமனின் 'ஹாத்தி மேரா சாத்தி'யில் இணைந்தது மகிழ்ச்சி. ராணாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் நடிக்கிறேன். தெலுங்கில் எனது முதல் அறிமுகம். இது கும்கி 2 கிடையாது. வேறு எந்த படத்தின் ரீ-மேக்கும் இல்லை என தெளிவாக கூறியுள்ளார்.