Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியை முந்திய சிவகார்த்திகேயன்

28 மே, 2018 - 15:36 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-beats-Rajini-:-5-Million-followers

தமிழ்த் திரையுலகத்தில் மற்ற வளர்ந்த ஹீரோக்கள், வளரும் ஹீரோக்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்துவிட்டவர் சிவகார்த்திகேயன். அவருக்கு 20 கோடி வரை சம்பளம் கொடுத்து தங்களது படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும் வெளித் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, நண்பரின் தயாரிப்புக் கம்பெனியில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். மேலும், அவரே சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்துவிட்டார்.

சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அறிமுகமாகும் 'கோலமாவு கோகிலா' படத்தில் அவர் எழுதிய பாடலான 'கல்யாண வயசு' பாடல் 1 கோடி பார்வையை யு டியூபில் கடந்திருக்கிறது. அதே சமயம் டுவிட்டரில் 5 மில்லியன், அதாவது 50 லட்சம் தொடர்பாளர்களைத் தொட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சமீப காலமாக டுவிட்டரில் பிரபலங்கள் வைத்திருக்கும் தொடர்பாளர்களின் எண்ணிக்கையில் பல கணக்குகள் போலியானவை என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த விதத்தில் சிவகார்த்திகேயன் கணக்கில் இருக்கும் 50 லட்சம் தொடர்பாளர்களின் எண்ணிக்கையில் எத்தனை உண்மையானவை, எத்தனை போலியானவை என்பது தெரியவில்லை.

டுவிட்டரில் 50 லட்சத்தை கடந்த நடிகர்களின் வரிசையில் சிவகார்த்திகேயன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதற்கு முன் தனுஷ், கமல்ஹாசன் ஆகியோர் 50 லட்சம் தொடர்பாளர்களைக் கடந்த நடிகர்களாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த் கூட இன்னும் 50 லட்சம் தொடர்பாளர்களைத் தொடவில்லை. ஆனால், அதற்குள் சிவகார்த்திகேயன் 50 லட்சத்தை தொட்டுவிட்டார்.

ஹிந்தி சினிமா பிரபலங்களின் டுவிட்டர் கணக்கில் உள்ள போலி தொடர்பாளர்கள் விவரங்கள் வெளிவந்தது போல் விரைவில் தமிழ் சினிமா பிரபலங்களின் போலி தொடர்பாளர்கள் பற்றிய விவரங்களும் வெளியாகும் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in