Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கண்ணுக்குத் தெரியாத 'காலா' எமோஜி

28 மே, 2018 - 12:48 IST
எழுத்தின் அளவு:
Kaala-Emoji-not-visible

ரஜினிகாந்த் நடித்து ஜுன் 7ம் தேதி வெளிவர உள்ள 'காலா' படத்திற்காக டுவிட்டரில் 'காலா' எமோஜி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் 'காலா' என டைப் செய்யும் போது ரஜினிகாந்தின் 'காலா' போஸ்டர் ஒன்று எமோஜியாக தானாகவே பதிவாகும். இப்படிப்பட்ட எமோஜி இதற்கு முன் 'மெர்சல்' படத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் 'காலா' படத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சில குறிப்பிட்ட நாட்களுக்கு டுவிட்டரில் நடைமுறையில் இருக்கும்.

'காலா' படம் ஜுன் 7ம் தேதி தமிழில் தன்னந்தனியாக வருகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்றாலே அந்த சமயத்தில் வேறு படங்களை வெளியிட மாட்டார்கள். இருப்பினும் அதே தினத்தில் இயக்குனர் அமீர் தயாரித்துள்ள 'அச்சமில்லை அச்சமில்லை' படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'காலா' உடன் போட்டி போட பலரும் தயக்கப்பட்டு அவர்களது பட வெளியீட்டைத் தள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், 'காலா'வுக்கே சரியான போட்டியாக ஹாலிவுட் படமான 'ஜுராசிக் வேர்ல்டு - தி பாலன் கிங்டம்' படம் வெளிவருகிறது.

'காலா' படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் டுவிட்டரில் 'காலா' எமோஜியை வெளியிட்டுள்ளார்கள். இருப்பினும் டுவிட்டரில் வந்துள்ள 'காலா' எமோஜி கண்ணுக்குத் தெரியாமல் ஏதோ ஒரு கருப்பு வட்டத்திற்குள் சிறிய சிவப்புப் புள்ளி இருப்பது போலவே தெரிகிறது. ரஜினிகாந்தின் வேறு 'காலா' புகைப்படத்தைப் போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in