‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ்த் திரையுலகத்தில் வசூல் நாயகனாக இருப்பவர் ரஜினிகாந்த். அவர் நடித்து வெளிவரும் படங்கள் தமிழ்நாட்டில் மிகப் பெரும் வசூலைக் குவிக்கும். மற்ற மாநிலங்களில் மோசமில்லை என்று சொல்லும் அளவிற்கு வசூல் இருக்கும். அவருடைய அடுத்த படமான 'காலா' வரும் ஜுன் மாதம் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. பள்ளிகள் திறக்கும் நேரம் என்றாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் படத்தை அன்றைய தினம் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
இருந்தாலும் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் கவர்ந்த 'ஜுராசிக்' சீரிஸ் படமான 'ஜுராசிக் வேர்ல்டு - தி பாலன் கிங்டம்' படம் ஜுன் 7ம் தேதி வெளிவருவது 'காலா'வுக்குக் கொஞ்சம் சிக்கலைத் தரும் என்பது உண்மைதான்.
'ஜுராசிக்' சீரிஸ் படங்கள் இந்தியாவில் அதிகமான வசூலைக் குவிப்பது வழக்கம். இப்போது வரவுள்ள 'பாலன் கிங்டம்' படமும் மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இந்தியாவில் ஹாலிவுட் படங்கள் மிகப் பெரிய வசூலைக் குவித்து வருகின்றன. ஏப்ரல் மாதம் வெளிவந்த 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் இந்தியாவில் மட்டும் 200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. அதற்குக் காரணம் குழந்தைகள்தான்.
ஆனால், 'காலா' படத்தின் டீசர் அது ஒரு சீரியசான ரஜினி படமாகவும், வழக்கமான ரஜினி படமாகவும் இல்லாமல் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியிருந்தால் படத்தைப் பார்க்க சிறுவர்கள், சிறுமியர்கள், குடும்பத்தினர் அதிகம் வர விரும்பமாட்டார்கள். அவர்களது விருப்பம் 'ஜுராசிக் வேர்ல்டு பாலன் கிங்டம்' படமாகத்தான் இருக்கும். அந்தப் போட்டியை 'காலா' எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வி.
அதேசமயம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பிரச்னை ஓடிக் கொண்டிருப்பதால் காலா ரிலீஸை தள்ளி வைக்கவும் அதிக வாயப்பிருக்கிறது.