'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷின் சொந்தத் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'வட சென்னை'. இப்படத்தின் முதல் பார்வை கடந்த மார்ச் மாதம் வெளியானது. படத்தின் தலைப்பே இது என்ன மாதிரியான கதை என்பதைச் சொல்லிவிடும். படத்தில் கேரம் விளையாட்டு வீரர் ஆக தனுஷ் நடிக்கிறார் எனத் தகவல். அவருடைய காதலியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
சில பல தாமதங்கள், இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. முதலில் இப்படத்தை ஜுன் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள். அதனால் தான் மார்ச் மாதத்தில் முதல் பார்வையை வெளியிட்டார்கள்.
ஆனால், 'காலா' படம் ஜுன் மாதம் 7ம் தேதி வெளிவருவதால் தற்போதைக்கு 'வட சென்னை' வெளியீட்டை ஆகஸ்ட் மாதம் தள்ளி வைத்திருப்பதாகத் தகவல். 'வட சென்னை' படத்தின் முதல் பாகம் வெளிவந்த பிறகு இந்த வருடத்திலேயே 'மாரி 2' படமும் வெளிவரும்.
இடையில் தனுஷ் நடித்துள்ள பிரெஞ்ச் மற்றும் ஆங்கில மொழிப் படமான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப்த பாகிர்' படமும் வெளிவரும்.