டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிந்த ஹாலிவுட் திரைப்படம் ரிச்சர்ட் தி லயன் ஹார்ட் : ரெபலியன். டெபி ரெக்கான், சாண்டலர் மானஸ், மைக்கேல் லூப்ஸ் கர்டோசோ, நெய்ல் கூல் உள்பட பலர் நடித்திருந்தனர். ஸ்டெபினோ மில்லா இயக்கி இருந்தார். டாம் கியூபனோ இசை அமைத்திருந்தார், பெப்ரிசியோ மெய்னர்டி ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டது போன்று, ஐரோப்பாவில் நடந்த சகோதர சண்டை பற்றிய சரித்திரக்கதை. 3 சகோதரர்களின் யுத்தமும், முடிவும் சொல்லும் படம். பாகுபலி போன்று கற்பனை கலந்த கதை. தற்போது ஹாலிவுட் படங்கள் தமிழ்நாட்டில் நல்ல வசூலை கொடுப்பதால் இந்தப் படத்தையும் தமிழில் டப் செய்து வருகிற ஜூன் 1ந் தேதி வெளியிடுகிறார்கள். நியூ ஆர்.எஸ்.எம் சார்பில் எம்.மாரிமுத்து வெளியிடுகிறார். ஆங்கிலத்திலும் வெளிவருகிறது.