'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
சசிகுமாரால் சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் சவுந்தர்ராஜா. அதன் பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகிர்தண்டா, தர்மதுரை, தங்கரதம், ஒரு கனவு போல, திருட்டு பயலே 2, உள்பட பல படங்களில் நடித்தார். எனக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை படத்தில் ஹீரோவாக நடித்தார். தற்போது கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கும் சென்னை தனியார் நிறுவன அதிகாரி தமன்னாவுக்கும் நேற்று சவுந்தர்ராஜாவின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் திருமணம் நடந்தது. இது பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட திருமணம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் காளி வெங்கட், நடிகை ரோகினி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.