சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ஏ.ஆர்.முருகதாசும், விஜய்யும் முதலில் இணைந்த படம் துப்பாக்கி. அந்தப் படம் வணிகரீதியில் வெற்றி பெற்றதன் காரணமாக அடுத்து இருவரும் இணைந்த படத்துக்கு கத்தி என பெயர் வைத்தனர். இந்த வரிசையில் ஏ.ஆர். முருகதாசும் விஜய்யும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய் 62 படத்துக்கு ஏதாவது ஒரு ஆயுதத்தின் பெயரையே சூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அது தற்போது உண்மையாகியுள்ளது. விஜய் 62 என்று குறிப்பிடப்படும் இந்தப் படம் விவசாயம் தொடர்பான கதை என்ற தகவல் பரவியுள்ளது. விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் நல்லது செய்ய நினைக்கும் பணக்காரராக விஜய் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படத்திக் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் டைட்டில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் அடிபடுகிறது. அதன்படி படத்துக்கு கோடாரி என தலைப்பு சூட்டப்படும் என்று படத்தயாரிப்பு தரப்பில் கூறுவதாக சொல்லப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பழ.கருப்பையா, ராதாரவி வில்லனாக நடிக்கின்றனர்.
இந்தப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.