தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காலா , 2.0 என இரண்டு படங்கள் ரஜினியின் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. இதில், பா.இரஞ்சித் இயக்கியுள்ள காலா படம், ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட இருக்கிறது என்ற தகவல் படத்துறையில் பேசப்படுகிறது.
நானா படேகர், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ், அஞ்சலி பாட்டீல், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூன் 4-ம் தேதி டேராடூனில் தொடங்க இருக்கிறது. இதற்காக கிட்டத்தட்ட 200 பேர் கொண்ட குழு ஜூன் 1ம் தேதியே படக்குழுவினர் டேராடூன் புறப்பட்டுச் செல்கிறது.
இந்தப் படத்தில், ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா.
ஜிகர்தண்டா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பாபி சிம்ஹாவுக்கு கிடைத்தது. சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில் அவர க்ளிக்காகவில்லை. எனவே மீண்டும் வில்லனாக நடிக்கத் தொடங்கினார் பாபிசிம்ஹா.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மெர்க்குரி படத்தில் நடித்தவர்தான் சனந்த் ரெட்டி.