ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மலையாளத்தில் 'சூடானி ப்ரம் நைஜீரியா' என்கிற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் நடித்த நைஜீரிய நடிகர் சாமுவேல் தனது நடிப்பால் புகழ்பெற்றதை விட, தான் கறுப்பர் என்பதால் தனக்கு சம்பளம் குறைவாக கொடுக்கப்பட்டதாக கிளப்பிய பகீர் குற்றச்சாட்டால் ரொம்பவே பிரபலமானார்.
ஒருவழியாக அந்த பஞ்சாயத்தெல்லாம் முடிந்து உரிய சம்பளத்தையும் பெற்றுக்கொண்டு நைஜீரியா திரும்பிய சாமுவேல், மீண்டும் கேரளாவுக்கு வருவேன் என கூறிச்சென்றார். அந்தவகையில் பார்த்தசாரதி என்கிற தெலுங்கு இயக்குனர் மலையாளத்தில் தான் இயக்கும் 'பர்ப்பிள்' என்கிற படத்தில் 'சூடானி' சாமுவேலை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். முந்தைய படத்திற்கு அப்படியே நேர்மாறாக இதில் வில்லனாக நடிக்கிறாராம் சாமுவேல்.