தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான படம் டங்கல். இந்த படத்தில் குத்துச்சண்டை வீரராக வேண்டும் என்ற தனது கனவு நனவாகாமல் போக, பின்னர் தனது மகள்களை குத்துச்சண்டை வீராங்கணைகளாக்கி தனது கனவை நனவாக்கிக்கொள்வார் அமீர்கான்.
அதேபோன்றுதான் தற்போது சத்யராஜ்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் கனா படமும் கிரிக்கெட்டில் சாதிக்க நினைத்த ஒருவர், தனது கனவை மகளை வைத்து நனவாக்கும் கதையில் உருவாகிறது.
இந்த படத்தில் அதிரடி கிரிக்கெட் வீரராக நடித்துள் ளார் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ். கிரிக்கெட்டில் அவருக்கு முன் அனுபவம் இல்லாத நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவ் வாட்மோர் என்பவரிடம் முறையான பயிற்சி பெற்று நடித்துள்ளார். அதனால் பெரும்பாலும் ஆண்களே கிரிக்கெட் விளையாட்டில் முதலிடம் பிடித்து வரும் நிலையில், இந்த படத்திற்கு பிறகு பெண்களுக்கும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படுமாம்.