ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
காஜல்அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். இவர் விமல் நடித்த இஷ்டம் படத்தில் நாயகியாக நடித்தார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை. அதோடு புதிதாக நிஷா அகர்வாலுக்கு படங்களும் புக்காகவில்லை. அதனால் மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இஷான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, தான் மும்பை செல்லும்போதெல்லாம் தங்கையின் மகனுடன் ஜாலியாக பொழுதை கழிப்பதாக பேட்டி களில் தெரிவித்து வந்தார் காஜல்அகர்வால். தற்போது தான் தங்கை மகன் இஷானுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் காஜல்.