விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரு முக்கியமான பாத்திரத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி நடிக்கிறார்.
அனிருத் இசை அமைக்கிறார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கவிருக்கும் நிலையில் இன்னும் இந்த படத்திற்கான கதாநாயகி முடிவாகவில்லை.
இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அதாவது கதாநாயகியாக சிம்ரன் நடிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் படத்துறையில் அடிபடுகிறது. சமீபத்தில் நடந்த 'காலா' ஆடியோ வெளீயிட்டு விழாவில், 'இனி என் மகள் வயதுடைய கதாநாயகிகளுடன் நடிக்க விருப்பம் இல்லை என்று பேசியிருந்தார் ரஜினி.
எனவே ரஜினியின் வயதுக்கும் அவர் ஏற்கும் கேரக்டருக்கும் பொருத்தமான ஹீரோயினை தேர்வு செய்ய கார்த்திக் சுப்பராஜ் முடிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் இந்த படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு நம்பர் ஒன் கதாநாயகியாக இருந்த சிம்ரன், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, சரத்குமார் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இதுவரை அவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்ததில்லை.
சிம்ரனுக்கு இருந்த இந்தக்குறை கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதன் மூலம் நிறைவேறப்போகிறது.