பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் காலா. 1980-களில் மும்பை தாராவியில் நடந்த கதையில் இந்த படம் தயாராகியுள்ளது. இதில் ரஜினி தாதாவாக நடித்துள்ளார். அவருடன் ஹூமா குரோசி, சமுத்திரகனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஜூன் 7-ந்தேதி திரைக்கு வருகிறது.
மேலும், இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக ஈஸ்வரிராவ் நடித்துள்ள நிலையில், அவரது காதலியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். அதேசமயம் இவர் கதைப்படி 45 வயது பெண்ணாக நடித்துள்ளாராம். இந்த கேரக்டருக்காக தனது வழக்கமான நடிப்பிலிருந்து மாறுபட்ட வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறாராம் ஹூமா குரேஷி.