தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவில் வித்தியாசமான நடிகை பார்வதி. பூ உட்பட சில தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். துணிச்சலான கருத்துக்களை கூறுகிறவர். நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறவர். பட வாய்ப்பு இல்லாவிட்டால் அதைப்பற்றி கவலைப்படாமல் தோட்ட வேலை செய்கிறவர். சமீபத்தில் தேசிய விருது பெற்றார்.
பார்வதி தனது தோற்றத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார். திடீரென முடியை கிராப் வெட்டிக் கொள்வார். பெரிய கண்ணாடி அணிவார். திடீரென ஆண்கள் போன்ற முடி வெட்டிக் கொள்வார்.
பார்வதியின் இப்போதைய தோற்றத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். அதில், தலையின் இடது புறம் ஒரு பகுதியில் மட்டும் முடியை மிகவும் குறைந்து, லோசான நரைமுடியுடன் புதிய தோற்றத்திற்கு வந்திருக்கிறார். ஆனால் பார்வதியின் இந்த தோற்றம் அவரது தீவிர ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. டுவிட்டரில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்கிற ரேன்ஞ்சில் பீல் பண்ணி வருகிறார்கள்.