அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்தவர். கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரைக் காதலித்து 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு லன்யா, சாஷா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இப்போது ரம்பா மூன்றாவது குழந்தைக்குத் தாயாகி உள்ளார்.
இது பற்றி அவருடைய சமூக வலைத்தளத்தில், “இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில் உலகம் முழுவதும் உள்ள என்னுடைய அன்பானவர்களுக்கு நான் மூன்றாவது குழந்தைக்குத் தாயாகியுள்ள தகவலைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. எனக்காவும் என் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனக் கூறி அவருடைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.