ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக 'சமீபத்தில் 'நடிகையர் திலகம்' என்கிற படம் வெளியானது. சாவித்திரியை ஆஹா ஓஹோவென புகழ்ந்திருந்த இந்தப்படத்தில் ஜெமினி கணேசனை வில்லன் போல சித்தரித்திருந்தார்கள். குறிப்பாக சாவித்திரிக்கு, ஜெமினி தான் மதுப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தார் என படத்தில் காட்டியிருந்தார்கள்.
இந்தப்படத்தை பார்த்த ஜெமினியின் மகள்களில் ஒருவரான டாக்டர் கமலா செல்வராஜ், "தனது தந்தையைப்பற்றி உண்மைக்கு புறம்பாக சொல்லியிருக்கிறார்கள்" என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தநிலையில் ஜெமினி - சாவித்திரியின் மகளான விஜய சாமுண்டீஸ்வரி பதிலளித்திருப்பதாவது... “கமலா அக்கா இந்தப்படத்தை தந்தையின் (ஜெமினி கணேசன்) கோணத்தில் பார்த்துள்ளார். நான் எனது தாயின் (சாவித்திரியின்) கோணத்தில் பார்த்தேன். இதையெல்லாம் சர்ச்சையாக்கி, அதனால் என் அக்காவின் உறவை இழக்க விரும்பவில்லை” என கூறியுள்ளார் விஜய சாமுண்டீஸ்வரி.