விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசை அமைக்கும் படம் பியார் பிரேமா காதல். இலன் என்ற புதுமுகம் இயக்குகிறார். ராஜு பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்கிறார். ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் புகழ் ரைஸா நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு கிழக்கு ஐரோப்பிய நாடான அசர்பைஜான் நாட்டில் முடிவடைந்திருக்கிறது. இதுகுறித்து யுவன் கூறியதாவது:
பாடல் காட்சிகளுக்காக இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் அசர்பைஜான் நாட்டுக்கு சென்றோம். காதலுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினால் அது அசர்பைஜான் தான். காதல் தேசம் என்று அழைக்கலாம். அத்தனை அழகு. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு காதல் படம் வரும், வந்து வெற்றி பெறும் என்பார்கள். இந்த யுகத்துக்கு "பியார் பிரேமா காதல்" என்று உறுதியாக கூறுவேன் என்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.