இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை அஞ்சலி, பலூன் என்ற படத்தில் பேயாக நடித்தார். தற்போது லிசா என்ற படத்தில் மீண்டும் பேயாக நடிக்கிறார். இதில் அவர் மட்டுமே நடிக்கிறார். நயன்தாரா நடித்த மாயா மாதிரியான கதை. இதனை ராஜூ விஸ்வநாத் என்ற புதுமுகம் இயக்குகிறார். பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிக்கிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு நடக்கிறது. லிசா என்ற கேரக்டரில் அஞ்சலி நடிக்கிறார். இது ஹாரர் திரில்லர் வகைப்படம்.
"லிசா, நான் அதிகம் எதிர்பார்க்கும் படம். எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். படப்பிடிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார் அஞ்சலி.