டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள திரையுலகத்தினர் அனைவராலும் 'லாலேட்டன்' என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மோகன்லால், இன்று தனது 58வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். பிறந்தநாள் பரிசாக ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக அவர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் நீராளி' படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள்.
டிரைலரை பார்க்கும்போது மோகன்லாலின் ஒரு கார் பயணமும், அதை தொடர்ந்து மலைப்பாதையில் நடக்கும் ஒரு விபத்தும், அதில் மோகன்லாலும் அவரது நண்பரும் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடுவதும் என படத்திற்கான எதிர்பார்ப்பு அம்சங்கள் நிறையவே இருகின்றன.
அறிமுக இயக்குனர் அஜய் வர்மா இயக்கியுள்ள இந்தப்படத்தில் நதியா, பார்வதி நாயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். வரும் ஜூன் மாதம் ரம்ஜான் பண்டிகை ரிலீசாக வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.