என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'காளி'. அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இவர்களில் ஷில்பா மஞ்சுநாத் பெங்களூரைச் சேர்ந்தவர். அவருக்கு, இதுதான் முதல் தமிழ்ப்படம்.
அல்ட்ராமாடர்ன் பெண்ணான இவர், காளி படத்தில் கிராமத்துப் பெண்ணாக ஹோம்லியான கேரக்டரில் நடித்துள்ளார். அவரது நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. காளி படம் வெளியான சில நாட்களிலேயே ஷில்பா மஞ்சுநாத்துக்கு புதிய படம் கமிட்டாகியுள்ளது.
ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இவர். விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் ('மெல்லிசை') படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இந்தப் படத்தை இயக்குகிறார்.
'பிக் பாஸ்' புகழ் ரைஸா வில்சனுடன் தற்போது, சேர்ந்து 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண். இளன் இயக்கும் இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
'பியார் பிரேமா காதல்' படத்தை அடுத்து ஹரீஷ்கல்யாண் நடிக்கும் படத்தில்தான் ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார்.