பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அரவிந்த்சாமி நடிப்பில் கடந்த வியாழன் அன்று வெளியா பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து அவரது நடிப்பில் அரை டஜன் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்நிலையில், ஐபி டிப்ளமோ படித்து முடித்துள்ள தனது மகன் ருத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது போட்டோவை முதன்முறையாக இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அரவிந்த்சாமி. அதோடு உன்னை சுற்றியிருப்பவர்களுக்கு உதவியாக இரு. உனது கனவுகள் பெரிதாக இருக்கட்டும் என்றும் மகனுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் தனது மகள் ஆதிரா தனக்காக செய்த கேக்கை தனது இணையபக்கத்தில் பதிவிட்டிருந்தார் அரவிந்த்சாமி. ஆனால் மகளின் படத்தை வெளியிடாத அவர், முதன்முறையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.