ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2013ம் ஆண்டு டுவிட்டரில் கணக்கு தொடங்கினார் ரஜினி. ஆனபோதும் அவர் டுவிட்டரில் ஆக்டீவாக இல்லை. அவ்வப்போதுதான் ஏதாவது ஒரு செய்திகளை பதிவிடுவார். இருந்தாலும் ரஜினியை 4.68 மில்லியன் பேர் டுவிட்டரில் பாலோ செய்து வருகிறார்கள்.
ரஜினி இணைந்த 2 ஆண்டுகள் கழித்து 2015ல் டுவிட்டரில் இணைந்தார் கமல்ஹாசன். ரஜினி போன்று இல்லாமல் அரசியல், சினிமா மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களையும் பதிவிட்டு வந்தார். அரசியல் பிரவேசத்திற்கு பிறகு முழுநேர அரசியல்வாதியாகவே மாறிவிட்டார்.
அதனால் கமலை பின்தொடர்வோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து, இப்போது 5 மில்லியன் பேர் அவரை தொடர்ந்து வருகிறார்கள். இதனால், டுவிட்டரில் ரஜினியை முந்தினார் கமல்.